இந்நூல் இந்தியப் பல்கலைக் கழகங்களின்
பி எட், எம்.எட் பட்ட வகுப்புகளுக்கான பாடதிட்டத்தை
கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலில்
காணப்படும் உளவியல் கருத்துகளும், கோட்பாடுகளும்
ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் அவற்றை
விளக்க கையாளப்பட்டிருக்கும் எடுத்துக் காட்டுகள்,
நம்நாட்டுச் சூழலில் ஒவ்வொரு மாணவரும்
சந்தித்திருக்கக் கூடிய அன்றாட வாழ்க்கை
அனுபவங்களை ஒட்டி அமைந்தவை என்பது
இந்நூலின் சிறப்பு.