இதுவரை வெளிவந்துள்ள இலக்கிய வரலாறுகள் எல்லாம் தனி ஒருவர் அல்லது இருவரால் எழுதப்பட்டதாக இருக்க இந்தப் புதிய தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனி அறிஞரால் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். கட்டுரைகளின் தரம் சிறப்பானதென்றாலும் பல்வேறு தனித்த பார்வைகளைத் தத்தம் கட்டுரைகளில் கட்டுரையாளர்கள் புலப்படுத்தியுள்ளனர். மரபு நோக்குள்ள கட்டுரைகளைப் போலவே திறனாய்வு நோக்குள்ள கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. வகுத்தும் தொகுத்தும் சொல்லும் பாங்கும் உண்டு. நவீனத்துவ, சமூக அணுகுமுறைக் கட்டுரைகளும் உண்டு. இதனால் வாசிப்பை மேற்கொள்வோருக்குப் பல்வேறு அணுகுமுறைகளை உணரும் வாய்ப்பு உண்டாகும்